சுயவிவரம்

முனைவர் (திரு) க. ரமேஷா மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிஎஸ்ஐஆர்- சிக்ரி) இயக்குனராக 29 ஏப்ரல் 2023 முதல் பதவி ஏற்றுள்ளார்.முனைவர் திரு. ரமேஷா அவர்கள் 1993 ஆம் ஆண்டில் வேதியியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டத்தை மங்கலூரூ பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை திண்ம-நிலை மற்றும் கட்டமைப்பு இரசாயனவியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக 2000ஆம் ஆண்டில் ஐ. ஐ. எஸ். சி பெங்களூருவிலும் பெற்றார். முனைவர் திரு. க. ரமேஷா அவர்கள் ஆற்றல் சேமிப்பிற்காக பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சியில் குறிப்பாக லித்தியம் அயனி மின்கலங்கள் மற்றும் திண்ம-நிலை மின்கலங்கள் போன்ற பிற எதிர்காலத்திற்கான சாதனங்கள் குறித்த துறைகளில் வல்லுநுவத்துவம் பெற்றவர்.முனைவர் திரு. க. ரமேஷா அவர்கள் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக 2001 முதல் 2006 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேரிலாந்து பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகம் போன்ற பல்வேறு அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர், பெங்களூருவில் உள்ள உயர்தர அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜவஹர்லால் நேரு மையத்தில், 2007 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளராக இணைந்து பின்னர் துரித பணியமர்த்தல் முறையில் விஞ்ஞானியான 2008ல் தன் பணியைத் துவங்கி அன்று சிக்ரியில் முதல் பல்வேறு பணி நிலைகளில் பணியாற்றி 2016 ஆம் ஆண்டு முதல் மூத்த முதன்மை விஞ்ஞானி பணியாற்றி வருகிறார்.

 

அவரது ஆராய்ச்சி நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • முனைவர் திரு. க. ரமேஷா அவர்கள் சிறந்த முனைவர் ஆய்வறிக்கைக்கான கெ. பி. ஆபிரகாம் பதக்கத்தை ஐஐஎஸ்சி, பெங்களூருவில் பெற்றார்.

  • பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் தற்போது வரை 91 ஆய்வு கட்டுரைகள் எழுதி உள்ளார். இவற்றில் இரண்டு ஆய்வு கட்டுரைகள் கௌரவமிக்க நேச்சர் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும்.

  • இரண்டு காப்புரிமைகளை பதிவு செய்துள்ளார்

  • ஐந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அவற்றுள் இரண்டை செயல் வடிவு தொழில்நுட்பமாகவும் மேம்படுத்தி சாதித்துள்ளார்.

  • இதுவரை 10 ஆராய்ச்சி மாணவர்களுக்கும் எண்ணற்ற முதுகலை மாணவர்களுக்கும் வழி காட்டியாக திகழ்ந்துள்ளார்.

 

தற்போது முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லித்தியம் அயனி மின்கலங்கள் உருவாக்கத்திற்கான குழுவை தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

 

உருளை வடிவ லித்திய அயனி மின்கலன் தயாரிப்பு ஆராய்ச்சியில் குறிப்பாக பல்வேறு எதிர்மின் வாய் சார்பு இரசாயனவியலில் ஈடுபட்டு வருகின்றார்.  இவர் முழுவதும் கார்னெட் நிலை திடமின்பகுபொருள் கொண்டு உருவாக்கப்பட்ட திண்ம-நிலை லித்தியம் அயனி மின்கலன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

 

மேலும், மீளக்கூடிய எதிர்மின்ம ஒடுக்க ஏற்ற வேதிவினைகள் எவ்வாறு அடுக்கு எதிர்மின் வாயின் மின்தேக்கு திறனை பாதிக்கிறது என்பதை முதன் முதலில் நிலைநாட்டினார்..