ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம நடவடிக்கைகளைத் தவிர, மின் வேதியியல் சக்தி அமைப்புகள் (காரிய அமில மின்கலன் அல்லது லித்தியம் அயன் மின்கல தொழில்நுட்பங்கள்) ஆகிய துறைகளில் தொழில்துறை / கல்வி சார்ந்த தொழில்நுட்பம் / புதுப்பிப்பு படிப்புகள் / திறன் மேம்பாட்டு பட்டறைகளையும் இந்த பிரிவு வழங்குகிறது.
ECPS- 1
மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள் துறை (ஈ.சி.பி.எஸ்) - காரிய அமில மின்கலன்
கோட்பாடு:
மின் வேதியியல் செல்களின் அடிப்படைகள், மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள், மின்கலன்கள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மின்கலன்கள்), காரிய அமில மின்கலன்கள், காரிய உலோகக்கலவைகள், பிரிப்பான்கள் மற்றும் மின்பகுளி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள். காரிய அமில மின்கலன்கள், கட்டம் வார்ப்பு, கலத்தல், ஒட்டுதல் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றில் அலகு செயல்பாடுகள். உருவாக்கம் மற்றும் செல் அமைத்தல். மின்கலன்களின் சோதனை, மின்கலன்களின் சார்ஜிங் முறை மின்கலன்களின் செயல்திறனை பாதிக்கும் காரணிகள். உலர் சார்ஜ் செய்யப்பட்ட மின்கலன்கள், வி.ஆர்.எல்.ஏ மின்கலன்கள், தத்துவங்கள், நற்பண்புகள் மற்றும் குறைபாடுகள். காரிய அமில மின்கலன்களின் குறைபாடு, காரணங்கள் மற்றும் தோல்விக்கான தீர்வு முறைகள் , வெவ்வேறு சார்ஜிங் முறைகள். குறைந்த எடை காரிய அமில மின்கலன்கள்.
பயிற்சி: காரிய ஆக்சைடு / ஈரமான பேஸ்ட் பிரிப்பான் தாக்க சோதனை / அதிர்வு மற்றும் சுமை சோதனை உருவாக்கும் செயல்முறைக்கான மின்சாரகணக்கீடு, 20 மணிநேர விகிதத்தை அடிப்படியாக கொண்ட திறன் சோதனை & 3 சி எச்ஆர்டி, போன்ற சோதனை அடிப்படையில் மின்கலத்தின் திறனை தீர்மானித்தல்.
ECPS- 2
மின் வேதியியல் சக்தி ஆதாரங்கள் துறை (ஈ.சி.பி.எஸ்) - லித்தியம் அயனி மின்கலன்
கோட்பாடு:
லித்தியம் அயன் மின்கல பொருட்களுக்கான அதாவது நேர்மின்வாய் , எதிர்மின்வாய், மின்பகுளி மற்றும் பிரிப்பான் போன்றவற்றுக்கான வெவ்வேறு வேதியியல், , எலக்ட்ரோடு பொருட்களின் செயல்திறன் ஆய்வு மற்றும் மதிப்பீடு, லித்தியம், அயனி மின்கலன்களின் சாத்தியமான பயன்பாடுகள், எலக்ட்ரோடு புனையல் / உருவாக்குதல், லித்தியம், அயனி செல்களை கொண்டு முழு லித்தியம் அயனி மின்கலத்தை உருவாக்குதல், வெவ்வேறு மின்கல அமைப்பு மற்றும் பகுதி , மின்கல சோதனை முறைகள், மின்கல செயல்திறனை பாதிக்கும் காரணிகள், லித்தியம், அயனி மின்கலத்திற்கான பாதுகாப்பு அம்சம் மற்றும் எதிர்கால லித்தியம் மின்கலன்கள்
பயிற்சி: லித்தியம் அயனி மின்கல பொருட்களை உற்பத்தி செய்தல், லித்தியம் அயனி மின்கல செல்களை உருவாக்குதல் மற்றும் சோதனை செய்தல் .