சி. இ. சி. ஆர். ஐ ன் உலோக மற்றும் பொருட்கள் அரிமானத் தடுக்கும் துறையின் செயல் வல்லமைகள்
- கட்டமைப்புகளின் தற்போதையே நிலை பற்றிய மேலீடான ஆய்வு
- புதிய கட்டமைப்புகளின் உலோக அரிமானம் மற்றும் வலிமைத் தன்மையைக் கண்காணித்தல்.
- கட்டமைப்புகளின் எஞ்சியுள்ள ஆயுட்காலத்தை உலோக அரிமான விகிதத்தின் அடிப்படையில் மதிப்பிடுதல்.
- கான்கிரிட் மற்றும் இரும்புக் கம்பிகளின் மேற்பரப்பில் பூசப்படும் வண்ணப்பூச்சுக் கலவைகளின் தன்மையை மதிப்பாய்வு செய்தல்
- அடிக்கட்டுமானங்களின் எதிர்மின்வாய் பாதுகாப்பு
- உலோக அரிமானத்தால் பழுதடைந்த கட்டமைப்புகளை பழுது பார்த்தால் மற்றும் மறுசீரமைத்தல்
- கழிவுப் பொருட்களை கட்டுமானங்களுக்கு பயன்படுத்துதல்
- பாலங்கள் மற்றும் கட்டுமான கட்டமைப்புகளை நிகழ்நிலை மூலம் கண்காணித்தல்
- கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளைப் பாதுகாக்க துருப்பிடிக்காத வண்ணப்பூச்சுகளை உருவாக்குதல்
- கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளை பாதுகாப்பதற்கான உலோக அரிமானக் குறைப்பான்களை உருவாக்குதல்
- உலோக அரிமானக் குறைப்பான்கள் மற்றும் சிமெண்ட் பூச்சு பூசப்பட்ட இரும்புக் கம்பிகளை மதிப்பாய்வு செய்வதற்கான பரிசோதனை வசதிகள்
- எதிர்மின்வாய் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு நேர்மின்வாய் உலோகங்களை உருவாக்குதல்
- துணைநேர்மின்வாய் உலோகக்கலவை மூலம் டிசி மின்சாரத்தை செலுத்தி எதிர்மின்வாய் பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை உருவாக்குதல்
- எதிர்மின்வாய் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை வடிவமைத்தல்
- மண்ணின் தடுப்பு செயல்திறன் நுண்மங்களின் பகுப்பாய்வு மின்னூட்ட அளவை அளத்தல், நேர்மின்வாய் உலோகத்தின் செயல்திறன், பொருட்களின் மேற்பரப்பில் பூசப்பட்ட வண்ணப்பூச்சுகளின் படலம், எதிர்மின்வாய் வினைகள் மூலம் உரிதல் மற்றும் எண்ணைக்குழாய்களில் திரவங்களின் ஓட்டத்தைக் கண்டறிதல் போன்ற பல்வேறு வகையான பரிசோதனைகளின் சேவைகள்
- உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளில் இறுக்கவிசை / பாரவிசை மற்றும் உலோக அரிமானம் இணைந்து நிகழ்வதால் அவற்றில் ஏற்படும் விரிசல்கள் பற்றிய பரிசோதனைகள்